100. அப்போஸ்தலர்களின் விசுவாசப் பிரமாணம்!

ஞானோபதேச ஆடியோவைக் கேட்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...

பரலோகத்தையும், பூலோகத்தையும், காணப்படுபவை, காணப்படாதவை ஆகிய எல்லாவற்றையும் படைத்த சர்வ வல்லபரான பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன்.  

சர்வேசுரனுடைய ஏக பேறான சுதனும், ஆண்டவருமான சேசு கிறீஸ்துவையும் விசுவசிக்கிறேன்.  

இவர் சகல யுகங்களுக்கு முன் பிதாவினிடமிருந்து ஜெனித்தார்.  

இவர் சர்வேசுரனிடமிருந்து ஜெனித்த சர்வேசுரன்; வெளிச்சத்தினின்றும் வந்த வெளிச்சம்; மெய்யான சர்வேசுரனிடமிருந்து வந்த மெய்யான சர்வேசுரன்.  

இவர் ஜெனித்தவர்; உண்டாக்கப் பட்டவரல்லர். பிதாவோடு ஒரே வஸ்துவானவர்.  இவர் வழியாகத்தான் யாவும் படைக்கப்பட்டன.  

இவர் மனிதராகிய நமக்காகவும், நம்முடைய இரட்சணியத்திற்காகவும் பரலோகத்திலிருந்து இறங்கினார். 

(முழந்தாட்படியிட்டு) இஸ்பிரீத்து சாந்துவினாலே கன்னிமரியம்மாளிடத்தில் மாமிசமாகி மனிதன் ஆனார். 

(மீண்டும் எழுந்து) இவர் இன்னும் நமக்காகப் போஞ்சியுஸ் பிலாத்தின் கீழ் சிலுவையிலே அறையப்பட்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.  

வேதாகமங்களின்படியே மூன்றாம் நாள் அவர் உயிர்த்தெழுந்தருளினார்.  

பரலோகத்திற்கு எழுந்தருளிப் பிதாவின் வலது பாரிசத்தில் உட்கார்ந்திருக்கிறார்.  

சீவியர்களையும் மரித்தவர்களையும் நடுத்தீர்க்க மகிமையோடே மீண்டும் வரவிருக்கிறார்.  

அவருடைய இராச்சியத்திற்கு முடிவு இராது.  

பிதாவிடத்தினிலும், சுதனிடத்திலும் நின்று புறப்படுகிற ஆண்டவரும், உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிற இஸ்பிரீத்து சாந்துவையும் விசுவசிக்கிறேன்.  

இவர் பிதாவோடும், சுதனோடும் ஒன்றாக ஆராதிக்கப்பட்டு மகிமைப்படுத்தப்படுகிறவரும், தீர்க்கதரிசிகள் வழியாய்ப் பேசியுள்ளவருமாமே.  

மேலும் ஏக, பரிசுத்த, கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன்.  

பாவ மன்னிப்புக்காகவுள்ள ஒரே ஞானஸ்நானத்தையும் ஏற்றுக்கொள்ளுகிறேன்.  

மரித்தோர் உத்தானத்தையும் எதிர்பார்க்கிறேன்.  

வரப் போகிற மறு உலகத்தின் சீவியத்தையும் எதிர்பார்க்கிறேன்.  

ஆமென்.

கருத்துகள்