102. உனக்குக் கர்த்தாவான சர்வேசுரன் நாமே; நம்மைத் தவிர வேறே சர்வேசுரன் உனக்கு இல்லாமல் போவதாக!

ஞானோபதேச ஆடியோவைக் கேட்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...

சர்வேசுரன் சுயாதீனரென்றும், நம்மையும் உலகத்திலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கிய கர்த்தரென்றும், சர்வத்துக்கும் ஆதியும் கடைசிக்கதியும், எஜமானரும் ஆனவர் அவர்தான் என்றும், அவர் நிகரில்லாதவர் என்றும் அங்கீகரித்து, அவர் சமுகத்தில் நம்மை முழுதும் தாழ்த்திக் கொள்வதே தேவ ஆராதனையாம்.

முதல்கற்பனையால் விலக்கப்பட்ட பாவங்கள் தேவ ஆராதனைக்கு விரோதமாயிருக்கிற விக்கிரக ஆராதனை, அஞ்ஞான சாஸ்திரம், பேய் ஊழியம், தேவதுரோகம், தேவ ஊழியத்தில் அசட்டைத்தனம் முதலியவைகளாம்.

சர்வேசுரனுக்குச் செலுத்த வேண்டிய தேவ ஆராதனையைச் சிருஷ்டிக்கப்பட்ட வஸ்துகளுக்குச் செலுத்துவதே விக்கிரக ஆராதனை எனப்படும்.

ஒரு காரியத்தை உண்டாக்கும்படி அல்லது பெற்றுக் கொள்ளும்படி, சர்வேசுரனாலாவது, திருச்சபையாலாவது ஏற்படுத்தப்படாத வழிவகைகளை அல்லது சுபாவ சக்தியால் வெற்றிபெற இயலாத வழிமுறைகளைப் பயன்படுத்தச் செய்யும் குருட்டு பக்தியே வீண் சாஸ்திரமாகும்.

கண் திருஷ்டி கழிக்கும்படி ஆரத்தி எடுத்தல் சாவான பாவமாகும். ஏனெனில், அது பசாசுக்குப் பலி ஒப்புக்கொடுக்கிற தற்கு ஒப்பாயிருக்கின்றது.

சுபாவமான காரணங்களினால் அறிந்துகொள்ள இயலாததை அறியும்படி, பசாசை நேரே அழைப்பது, அல்லது அதைக் கூப்பிடு வதற்குக் குறிக்கப்பட்டவைகளை உபயோகிப்பது சகுன சாஸ்திரமாம்.

ஜோதிட சாஸ்திரத்தில் நம்பிக்கை வைத்துச் சோசியம் கேட்பது எப்போதும் பாவமாகும்.

அரூபிகளோடு அல்லது இறந்துபோனவர்களின் ஆத்துமங் களோடு கூட்டுறவு பண்ணி, மனிதனுடைய சுபாவ அறிவினால் தெரிந்து கொள்ள முடியாத மறைந்த விஷயங்களை, அந்த அரூபிகளின் உதவியால் அறியும்படி பிரயாசைப்படுவதாம். இப்படிச் செய்வது விசுவாசத்துக்கு விரோதமான கனமான பாவம்.

தற்செயலால் வரும் கனவால் இனி நடக்கப் போகும் சம்பவங் களை அறியக் கூடும் என்று நம்புவது பாவமாம். 

மனித சக்தியால் செய்ய முடியாத அதிசயங்களைப் பசாசின் உதவியால் செய்வது மாயமாம்.

மந்திரங்களினாலும், பலிப்பூசைகளினாலும், பசாசின் உதவி யைக் கொண்டு பிறருக்கு வியாதி, பொருள், நஷ்டம் முதலிய துன்பங்களை வருவிக்கிறதும், அவர்களுக்குப் பகை, சிநேகம் மூட்டுகிறதும் பில்லிசூனியமாம்.

இயல்பான ஞான காரியங்களையாவது, அல்லது அவைகளோடு சம்பந்தப்பட்ட இலெளகீக காரியங்களையாவது, உலக வியாபார ரீதியில் விலைக்கு வாங்க, அல்லது விற்க வேண்டுமென்கிற தீர்மானமே சீமோனியம் எனப்படும் 

சம்மனசுகளையும் அர்ச்சியசிஷ்டவர்களையும் வணங்கி, அவர்களை நோக்கி நமது அவசியங்களில் வேண்டிக் கொள்வதால், நமது ஆத்துமத்துக்கும் சரீரத்துக்கும் ஏராளமான பலன்கள் உண்டு. இதினிமித்தம் அவர்களுக்கு வணக்கம் செலுத்தும்படி திருச்சபை தன் பிள்ளைகள் எல்லோரையும் பலமாய் ஏவித் தூண்டுகிறது.

கருத்துகள்