34. வாக்களிக்கப்பட்ட மெசையாவாகிய சேசுநாதருடைய தெய்வீகம்!

ஞானோபதேச ஆடியோவைக் கேட்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...

"வேதாகமத்தில் உங்களுக்கு நித்திய ஜீவியம் உண்டென்று எண்ணுகிறீர்களே; அவைகளை ஆராய்ந்து பாருங்கள். அவைகளே என்னைக் குறித்துச் சாட்சியஞ் சொல்லுகின்றன" (அரு.5:39). 

"நீர் கிறீஸ்துவானவர், சுயஞ்சீவிய சர்வேசுரனுடைய குமாரன்" (மத்.16:16). 

ஆங்காரமாகிய பாவத்தின் வழியாக சம்மனசுக்கள் வீழ்ச்சியடைந்து, பரலோகத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டார்கள். புலன்களைத் திருப்திப்படுத்தும் ஆசையோடு கூடிய ஆங்காரமே நம் முதல் பெற்றோரின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தது. 

அவர்களும் சிங்காரவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். “ஸ்திரீயிடமிருந்து ஒரு மகன் பிறப்பார், அவள் சர்ப்பத்தின் தலையை நசுக்குவாள்'' என்ற வாக்குறுதி உலகத்திற்குள் தேற்றரவைக் கொண்டு வந்தது.

மனிதன் ஆங்காரத்தினால் பாவம் செய்திருந்தான். தாழ்ச்சி அதற்கு எதிரான புண்ணியமாக இருக்கிறது. ஆகவே, மனிதனைத் தாழ்த்தி, அவனது திக்கற்ற நிலையை அவன் புரிந்து கொள்ளச் செய்யும்படி, கடவுள் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை நான்காயிரம் ஆண்டுகளுக்குத் தள்ளி வைத்தார்.

காலம் நிறைவுற்றபோது, கடவுள் தமது சம்மனசுக்களின் வழியாக, எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலகத்திற்கு இரட்சகரும், மீட்பருமானவர் வந்து விட்டார் என்று அறிவித்தார். 

தாமே வாக்களிக்கப்பட்ட மெசையா என்பதற்குச் சான்றாக, சேசுநாதர் யூதர்களுடனான தமது உரையாடல்களில், அடிக்கடி பழைய ஏற்பாட்டிலுள்ள தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை எடுத்துக் காட்டினார். 

“வேதாகமங்களை ஆராய்ந்து பாருங்கள். அவைகளே என்னைக் குறித்துச் சாட்சியம் சொல்லுகின்றன" (அரு.5:39). 

“மோயீசன் முதல் சகல தீர்க்கதரிசிகளாலும் தம்மைப் பற்றிச் சொல்லப்பட்ட சகல வேத வாக்கியங்களையும் அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்'' (லூக்.24:27).

கருத்துகள்