35. சேசுக்கிறீஸ்துநாதரின் மனித அவதாரம்!

ஞானோபதேச ஆடியோவைக் கேட்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...

கிறீஸ்தவ விசுவாசம் முழுவதினுடையவும் மூலைக்கல், அதை ஸ்தாபித்தவராகிய சேசுக்கிறீஸ்துநாதர் தெய்வீகமானவர் என்ற ஒரே உண்மையில்தான் உறுதிப் படுத்தப்படுகிறது. மற்ற கொள்கைகள் தங்களிலேயே பயனுள்ளவையாகவும், அழகானவை யாகவும் இருந்தாலும், அவற்றின் மதிப்பு, நம் இரட்சகரும், மீட்பருமானவர் மெய்யாகவே சர்வேசுரனாயிருக்கிறார் என்ற சத்தியத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளது. வாக்களிக்கப்பட்ட மெசையாவாகிய சேசுநாதரின் தெய்வீகத்தை எண்பிப்பதே நம் முந்தின பிரசங்கத்தின் நோக்கமாக இருந்தது. 

நம் மீட்பர் தேவ சுபாவத்தை மட்டும் சொந்தமாகக் கொண்டிருந்தார் என்றால், மனிதனின் பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய அவரால் முடியாமல் இருந்திருக்கும். ஏனெனில், கடவுள் என்ற முறையில், மனிதனுக்குப் பதிலாக, அவர் துன்பப்பட முடியாது. மறு புறத்தில், வெறும் மனித சுபாவத்தை மட்டும் அவர் கொண்டிருந்தால், மனிதனின் பாவத்திற்குத் தேவைப்பட்ட அளவற்ற பரிகாரத்தை அவரால் செய்ய முடியாமல் போயிருக்கும். ஆகவேதான், தேவ மனிதர் ஒருவரைத் தவிர வேறு யாராலும் மனிதனுடைய பாவத்திற்குப் போதுமான பரிகாரம் செய்ய முடியாது!

கருத்துகள்