55. பரிசுத்தம்: திருச்சபையின் இரண்டாம் அடையாளம்!

ஞானோபதேச ஆடியோவைக் கேட்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...

பரிசுத்ததனம் தனது பிரசித்தமான அடையாளம் என்று எந்தச் சபையும் உரிமை கொண்டாடுவதற்கு முன்பு, அது ஒரு ஸ்தாபகரைக் கொண்டிருக்க வேண்டும். 

அவர் தமது வாழ்வின் மறுக்கப்பட முடியாத அர்ச்சியசிஷ்டதனத்தாலும், புதுமைகளாலும், தாம் கடவுளால் அனுப்பப்பட்டவர் என்று நிரூபிக்கக் கூடியவராக இருக்க வேண்டும். 

இல்லாவிடில், நம் நித்திய இரட்சணியம் எதைச் சார்ந்திருக்கிறதோ, அந்த, சரியாயிருத்தல் என்ற காரியத்தைப் போன்ற மிக முக்கியமான காரியத்தில், நாம் அவரை நம்ப வேண்டும் என்ற கடமையைக் கடவுள் நமக்குத் தர இயலாது. 

ஆகவே, கொடிய, பாவமுள்ள, ஒழுக்கக் கேடான வாழ்வு நடத்துபவர்கள் சபைகளின் ஸ்தாபகர்களாக, அல்லது உண்மையான விசுவாசத்தின் சீர்திருத்தவாதிகளாக, தங்களை முன்னிறுத்துவார்கள் என்றால், அவர்கள் பொய்த் தீர்க்கதரிசகளாக இருக்கிறார்கள் என்பது தெளிவு. 

அத்தகைய மனிதர்களைத் தங்கள் ஸ்தாபகர்களாகக் கொண்டுள்ள மதப் பிரிவுகள் சேசுக்கிறீஸ்துநாதரின் உண்மையான திருச்சபையாக இருக்க முடியாது என்பது வெளிப்படை.

கத்தோலிக்கத் திருச்சபை மட்டுமே இந்தத் தகுதிகள் எல்லாம் தன்னிடம் இருப்பதாக உரிமை கொண்டாட முடியும். அதன் ஸ்தாபகரான சேசுநாதர் பரிசுத்தராக இருக்கிறார்.

கருத்துகள்