56. கத்தோலிக்கம்: திருச்சபையின் மூன்றாம் அடையாளம்!

ஞானோபதேச ஆடியோவைக் கேட்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...

கத்தோலிக்கம் என்னும் வார்த்தையே பொதுத் தன்மையை மறைமுகமாகக் குறிக்கிறது. இது கிறீஸ்துநாதரின் உண்மையான திருச்சபையின் அவசியமான, தனிப்பட்ட அடையாளமாக இருக்கிறது. 

அப்போஸ்தலர்களின் கீழ் “கத்தோலிக்கம்'' என்னும் வார்த்தை பயன்படுத்தப்படவேயில்லை என்று நாம் ஒப்புக் கொள்கிறோம். 

ஆனாலும் கிறீஸ்தவத்தின் தொட்டிலிலேயே இந்த வார்த்தையை நம்மால் காண முடிகிறது. தப்பறைகளும், பிரிவினைகளும் தலைதூக்கத் தொடங்கிய கணத்திலேயே, “திருச்சபை'' என்னும் பெயரோடு “கத்தோலிக்கம்'' என்ற வார்த்தை சேர்த்துக் கொள்ளப்பட்டது. 

மார்சியோனியர், அப்பொல்லோனாரியர், நோவேஷியர் என்று சில பிரிவினை சபையினர்கள் பொய்ப் போதகங்களை போதித்தாலும், தங்களைக் கிறீஸ்தவர்கள் என்று அழைத்துக்கொண்டார்கள். 

“என் சொந்த மக்களின் சபை கத்தோலிக்கம் என்று அழைக்கப்படாவிட்டால், இந்தத் திருச்சபையை நாம் எந்தப் பெயரில் அடையாளம் காண முடியும்? உன்னையே கவலைக்கு உள்ளாக்கிக் கொள்ளாதே; கிறீஸ்தவன் என்பது என் பெயர், கத்தோலிக்கன் என்பது என் துணைப் பெயர். முந்திய வார்த்தை என் பெயராக இருக்கிறது, பிந்திய வார்த்தை என்னை விளக்குகிறது'' என்கிறார்  அர்ச். பாஸியன்.

இத்தனை நூற்றாண்டுகளாக, “கத்தோலிக்கம்'' அல்லது பொது என்னும் பெயர், மற்ற சபைகள் அனைத்திலுமிருந்து கிறீஸ்துநாதரின் திருச்சபையைப் பிரித்துக் காட்டும் அதே அடையாளமாக எப்போதும் இருந்து வந்துள்ளது.

கருத்துகள்