58. வேதகலாபனை திருச்சபையின் இரண்டாந்தர அடையாளம்!

ஞானோபதேச ஆடியோவைக் கேட்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...

நம் காலத்தில் பல சபைகள் இருக்கின்றன, ஆனால் கிறீஸ்துநாதரின் தீர்க்க தரிசனங்கள் நிறைவேறியுள்ளது ஒரே ஒரு திருச்சபையில்தான். அந்த ஒன்று கத்தோலிக்கத் திருச்சபையே. 

வரலாறும், பரிசுத்த வேதாகமமும் இதற்கு சாட்சிகளாக இருக்கின்றன. மற்ற சபைகள் போதகத்திலும், வேத அனுசரிப்பிலும் பெருமளவு மாறுபடுகின்றன. ஆனால் கத்தோலிக்கக் திருச்சபையைப் பற்றி அபாண்டங்களைச் சொல்வதிலும், அதைத் துன்புறுத்துவதிலும் அவர்கள் அடிக்கடி ஒன்றாகச் சேர்ந்துகொள்கிறார்கள். 

ஜெருசலேமில் அர்ச். முடியப்பர் கல்லாலெறிந்து கொல்லப்பட்ட நாள் முதல் ஒவ்வொரு காலகட்டத்திலும், கத்தோலிக்கத் திருச்சபை துன்புறுத்தப்பட்டு வந்துள்ளது. 

தொடக்கத்திலிருந்தே, வெளியிலிருந்து தன்னைத் தாக்கும் அவிசுவாசிகள் மற்றும், தனக்குள்ளேயே எழும் தப்பறைகள் என்னும் இருவித எதிரிகளுக்கு எதிராக இடைவிடாமல் போர் செய்ய நியமிக்கப்பட்டதாக அது இருக்கிறது. 

கிறீஸ்தவத்தின் முதல் எதிரிகளுக்குக் கமாலியேல் சொன்ன அதே வார்த்தைகளைத் திருச்சபையும் தன் எதிரிகளிடம் சொல்ல முடியும்: “இது சர்வேசுரனால் உண்டாயிருந்தால், நீங்கள் சர்வேசுரனையே எதிர்த்து விரோதிக்கிறவர்களாக எண்ணப்படுவீர்களே தவிர, இதை அழிக்க உங்களாலே கூடாது'' (அப்.நட.6:39). 

திருச்சபை அழிக்கப்பட்டு விடவில்லை. ஏனெனில் அது கடவுளுடையது. 

முதல் வேத கலாபனை: கி.பி. 64 - 68.

இரண்டாம் வேத கலாபனை: கி.பி. 89 - 96.

மூன்றாம் வேத கலாபனை: கி.பி. 98 - 117.

நான்காம் வேத கலாபனை: கி.பி.161 - 180.

ஐந்தாம் வேத கலாபனை: கி. பி. 193 - 211.

ஆறாம் வேத கலாபனை: கி.பி. 235 - 238.

ஏழாம் வேத கலாபனை: கி.பி. 249 - 251.

எட்டாம் வேத கலாபனை: கி.பி. 253 - 260.

ஒன்பதாம் வேத கலாபனை: கி.பி. 270 - 275.

பத்தாம் வேத கலாபனை: கி.பி. 284 - 286.

கருத்துகள்