60. ஒரே இரட்சணிய சபையாகிய கத்தோலிக்கத் திருச்சபை!

ஞானோபதேச ஆடியோவைக் கேட்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...

இரட்சணியத் திற்குரிய நிபந்தனைகளை விதிப்பது திருச்சபை அல்ல, மாறாக, கிறீஸ்துநாதரே அதைச் செய்கிறார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 

கிறீஸ்துநாதர் மற்றும் அப்போஸ்தலர்களின் வார்த்தைகளை அப்படியே திருப்பிச் சொல்வது மட்டும்தான் திருச்சபையின் வேலை.

யூதர்கள் புறவினத்தாரைப் பொறுத்துக் கொள்ளாததும், உரோமையர்கள் யூதர்களை வெறுத்ததும், அஞ்ஞானிகள் கிறீஸ்தவர்களைத் தாங்கிக் கொள்ளாததுமான காலம் ஒன்று இருந்தது. 

கிறீஸ்தவர்கள் ப்ரொட்டஸ்டாண்ட் சபைகளை விரும்புவதில்லை, ப்ரொட்டஸ்டாண்ட்கள் கத்தோலிக்கத்தில் எந்த நன்மையும் காண்பதில்லை, ஒரு பிரிவினை சபை மற்றொரு சபை வெறுக்கிறது, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். 

இந்தப் பகைமை மிக அடிக்கடி எதிரிகளுக்கு எதிரான கலாபனைகளுக்கு வழி வகுத்தது.

கத்தோலிக்கத் திருச்சபைக்கு வெளியே இரட்சணியமில்லை.

கருத்துகள்