புத்தியுள்ள கத்தோலிக்கர்கள், கிறீஸ்தவர்கள் என்ற முறையில், உரோமைப் பாப்பரசரைப் பற்றிய உண்மையை, நாம் ஏன் அவரை வத்திக்கானின் கைதி என்று அழைக்கிறோம் என்பதை, அவர் எப்படி ஓர் உலகரீதியான அதிகாரத்தைச் சொந்தமாக்கிக் கொண்டார் என்பதை, திருச்சபையின் தலைவர் மற்ற எல்லா நாடுகளிடமிருந்தும் சுதந்திரமானதும், சார்பற்றதுமான ஒரு சிறிய நிலப்பகுதியைச் சொந்தமாகக் கொண்டிருப்பது ஏன் அவசியமாகிறது என்பதை, நாம் அறிந்திருக்க வேண்டும். இந்த விவரங்களை இன்று உங்களுக்குத் தெளிவுபடுத்த நாம் முயற்சி செய்வோம்.
முதல் பாப்பரசரான அர்ச். இராயப்பர் இத்தாலியிலும் உரோமையிலும் நுழைந்த போது, ஒரு காலடியளவு நிலம் கூட அவருக்குச் சொந்தமாக இருக்கவில்லை. உண்மையாகவே அவர் தம் தெய்வீக குருவோடு சேர்ந்து, “நரிகளுக்கு வளைகளுண்டு, பறவைகளுக்குக் கூடுகளுண்டு, மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை'' (மத்.8:20) என்று சொல்லக் கூடியவராக இருந்தார்.
பாப்புத்துவ மாகாணங்கள் என்று அழைக்கப்பட்ட இந்த மாகாணங்களின் பரப்பளவு சுமார் 16,000 சதுர மைல்கள் ஆகும். இந்த மாகாணங்களில் முப்பது இலட்சம் மக்கள் வாழ்ந்தார்கள். 1870 வரை, இப்பகுதிகள் பாப்பரசர்களால் ஆளப்பட்டு வந்தன. எனவே முழுக் கிறீஸ்தவ உலகின் ஆன்ம ஆட்சியாளராக மட்டுமின்றி, பாப்பரசர்கள் 1100 வருடங்களாக பாப்புத்துவ மாகாணங்களின் உலகரீதியான ஆட்சியாளர்களாகவும் இருந்தார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக