65. திருச்சபை சரித்திரம்! பாகம் 03.

ஞானோபதேச ஆடியோவைக் கேட்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...

உரோமைச் சக்கரவர்த்திகள் கிறீஸ்தவ வேதத்தைப் பகிரங்கமாய்ப் பகைத்து அதை அழித்துப் போடக் கங்கணம் கட்டுகிறார்கள். மனிதப் பதரான நீரோ கலாபனைகளுக்கு ஆரம்பகர்த்தா. 

அவனது ஆளுகையின்போது, உரோமையில் அர்ச். இராயப்பரும் சின்னப்பரும் கொலை செய்யப் பட்டார்கள்; எருசலேமில் சின்ன யாகப்பர் வேதசாட்சியானார். 

தோமிசியன் அர்ச். கிளமெந்தையும், பிலவேந்திரரையும் சாகடித்து, அர்ச். அருளப்பரைப் பாத்தோஸ் தீவுக்கு நாடுகடத்தினான். ட்ராஜன் அர்ச். கிளமெண்ட்டை நாடுகடத்தினான்; அர்ச். சிமியோனையும், இஞ்ஞாசியாரையும் கொலை செய்தான். 

அந்தோனின் அர்ச். பொலிக்கார்ப்பின் உயிரைப் பறித்தான். மார்க்குஸ் அவுரேலியுஸ் அர்ச். செசீலியம்மாளுக்கும், போதினுக்கும், பிளாந்தினம்மாளுக்கும், சிம்ப்போரியனுக்கும், யுஸ்தினுக்கும் மரண தண்டனை விதித்தான். 

செப்திமுஸ்- செவேருஸ், அர்ச். இரெனியுஸ், அர்ச். பெர்பெத்துவா, பெலிசித்தம்மாள் இவர்களைக் கொன்றான். தேசியுஸ் அர்ச். பபியானையும், ஆகத்தம்மாளையும், போலிக்துவையும் கொன்றான். 

வலேரியன், அர்ச். சிக்ஸ்துஸையும், லவுரேஞ்சியாரையும், சிப்ரியனையும், சிரிலையும் கொலை செய்தான். அவுரேலியன் அநேகரை வேதசாட்சிகள் ஆக்கினான். 

தியோக்கிளேசியன் அர்ச். ஆக்னஸம்மாளையும், செபஸ்தியாரையும், தெபேயன் பட்டாளத்தாரையும் கொன்றான்.


உரோமை இராச்சியத்தில் வேதகலாபனை,

சக்கரவர்த்திகளுடைய பகைக்குக் காரணம்,

பத்து வேதகலாபனைகள்,

வேதசாட்சிகளின் தொகை,

வேதசாட்சிகளின் காலம்,

பிரசித்தி பெற்ற வேதசாட்சிகள்,

சர்வேசுரனுடைய வேலையில் மனிதருடைய ஒத்துழைப்பு.

கருத்துகள்