66. திருச்சபை சரித்திரம்! பாகம் 04.

ஞானோபதேச ஆடியோவைக் கேட்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...

திருச்சபையின் படிப்பினைக்கு விரோதமான போதகமே பேதகம் (பதிதம்) எனப்படுகிறது. தப்பறையைப் போதிப்பதும், விசுவாச சத்தியங்களில் எதையாவது நிராகரிப்பதும் பேதகம் ஆகும்.

தப்பறை, ஆசாபாசம், வலுவந்தம் என்ற எதிரிகளோடு கிறீஸ்தவ வேதம் எப்போதும் போராட வேண்டியிருக்கிறது.

யூதர்களும் அஞ்ஞானிகளும் வேதசாட்சிகளும் இரத்தத்தைச் சிந்தும்போது, யூதச் சார்பினர், சீமோனியாக்கர், மறு ஞானஸ்நானக்காரர், மனிக்கேயர் ஆகியோரின் பேதங் களையும், பகைவர்கள் தூற்றின அவதூறுகளையும் திருச்சபை எதிர்த்துப் போராட வேண்டி யிருந்தது.

அஞ்ஞானிகள் கிறீஸ்தவ வேதத்துக்கு விரோதமாய்ப் பரப்பின அவதூறுகளைப் பலத்த நியாயங்களைக் கொண்டு எதிர்த்து அடக்கிய வேதபாரகர்கள் அநேகர்.

அப்போஸ்தலர்களும், அவர்களது சீடர்களும் காலஞ்சென்ற பின்னர், அர்ச். யுஸ்தின், கிளமெண்ட், தெர்த்துல்லியன், ஓரிஜன், அர்ச். சிப்ரியன் ஆகியோர் வேதத்துக்கு ஆதரவாயிருந்த முக்கியமானவர்கள்.

கலாபனைகள், அவதூறுகள், தப்பறைகள், பிரிவினைகள் மத்தியில் கிறீஸ்தவர்கள் வெகு துரிதமாய் அதிகரித்தார்கள். அஞ்ஞான நூலாசிரியர்களே கூட இதற்கு அத்தாட்சியாயிருக் கிறார்கள்.

தேவ பராமரிப்பு, சத்தியத்தின் வலிமை, பூர்வீக கிறீஸ்தவர்களின் மாசற்ற நடத்தை, அவர்களுடைய ஊக்கம், அற்புதங்கள், வேதசாட்சிகளின் வீரிய தைரியம், இவைகளே கிறீஸ்தவ வேத விருத்திக்குக் காரணங்கள்.


போதக பேதகங்களும், அவதூறுகளும்,

திருச்சபையின் மிகக் கொடிய விரோதிகள்,

விசுவாசத்துக்கும், புத்திக்கும் உள்ள ஒற்றுமை,

சத்தியத்தின் பாதுகாவலர்,

கிறீஸ்தவ வேதம் பரம்புதல்,

திருச்சபை அபிவிருத்திக்குக் காரணங்கள்,

அஞ்ஞான இருளின் மத்தியில் திருச்சபை.

கருத்துகள்