67. திருச்சபை சரித்திரம்! பாகம் 05.

ஞானோபதேச ஆடியோவைக் கேட்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...

ஆரம்பத்திலிருந்தே திருச்சபை அங்கத்தினர்களில் குருக்கள் என்றும், விசுவாசிகள் என்றும் இரு வகுப்புகள் இருந்தன.

குருக்களுக்குள் அதிகாரத் தரப்புகள் பல உண்டு. 

தேவ பணிவிடைக்காரர்களுக்கு விரத்தத்துவமே உகந்ததென்று துவக்கத்திலேயே யாவரும் உணர்ந்தார்கள்; அது அங்குமிங்கும் அனுசரிக்கப்பட்டு, 3-ம் நூற்றாண்டின் இறுதியில் கடமையாயிற்று.

நற்கருணைப் பலியே முக்கியமான தேவ ஆராதனை முயற்சி. மாலைப் போஜன வேளையில் ஏற்பாடாகி, இப்பலி மாலை நேரத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது; துவக்கத்தில், இதற்கு முன்பாகப் பந்தி போஜனம் நடந்தது.

பொது ஜெபத்துக்காகக் கிறீஸ்தவர்கள் தனி வீடுகளில்தான் கூடினார்கள். பின்னர் நாளடைவில் ஜெபக் கூடங்களும், ஆலயங்களும் ஏற்பட்டன. தேவ ஆராதனையின் மகத்துவமும் வெளிப்படையாயிற்று. ஞாயிற்றுக்கிழமைகளும், பாஸ்கு, பெந்தேகோஸ்து தினங்களும், கர்த்த்ர் பிறந்த நாளும், மூன்று இராஜாக்கள் திருநாளும்தான் திருவிழா நாட்களாயிருந்தன. வாரத்தில் இரண்டு நாட்களும், பாஸ்குத் திருநாளுக்கு முந்தின நாளும் உபவாச நாட்களாக அனுசரிக்கப் பட்டன.

பயங்கரமான வியாதியால் பீடிக்கப்பட்டு, கலேரியு கிறீஸ்தவர்களை உபத்திரவப்படுத்த வேண்டாம் என்று கட்டளையிட்டான். கொன்ஸ்தாந்தீனைச் சக்கரவர்த்தியாகத் தெரிந்து கொள்ளுகிறார்கள்; இதை மாக்சென்ஸ் எதிர்க்கிறான்.

மில்லியு பாலத்தருகில் போர் தொடுக்குமுன், கொன்ஸ்தாந்தீன் வானத்தில் பிரகாசமுள்ள ஒரு சிலுவையையும், ""இந்த அடையாளத்தால் நீ வெற்றி கொள்வாய்'' என்று அதில் எழுதப்பட்டிருப்பதையும் காண்கிறார். கொடுங்கோலனான மாக்சென்ஸ் தோல்வியடைந்து தைபர் நதியில் மூழ்கி இறக்கிறான்.

கொன்ஸ்தாந்தீன் நன்றியறிதல் உள்ளவராய்த் திருச்சபைக்குச் சுதந்திரம் அளித்து, கிறீஸ்தவ வேதப் படிப்பினையைக் கற்றுக் கொண்டு ஞானஸ்நானம் பெறுகிறார்.


திருச்சபையின் உள்ளரங்க அமைப்பு,

குருக்களும், விசுவாசிகளும்,

குருத்துவ விரத்தத்துவம், தேவ ஆராதனை,

ஆராதனைக்காக ஏற்பட்ட இடங்கள்,

கிறீஸ்தவத் திருநாட்கள், உபவாசத் திருநாட்கள்,

கொன்ஸ்தாந்தீன் அரசாட்சியில் திருச்சபைக்குச் சுதந்திரம்,

மிலான் இராஜ சாசனம், அர்ச். ஹெலேனம்மாள்.

கருத்துகள்