99. நித்தியம்! இது வேத சத்தியம்!

ஞானோபதேச ஆடியோவைக் கேட்க மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்யுங்கள்...

பூமி, சூரியன், சந்திரன், கோள்கள், நட்சத்திரங்கள் எல்லாம் ஒருநாள் அழிந்து போகும். காலச் சக்கரங்கள் ஒன்றையொன்று பின்பற்றி உருண்டோடும். நீர்ப்பரப்பில் விழுந்து ஒரு வட்டத்தை ஏற்படுத்திவிட்டு மறையும் நீர்த்துளி போல யுகங்கள் தோன்றி மறைந்து கொண்டிருக்கும். 

ஆனால் சபிக்கப்பட்ட ஆத்துமத்தின் நிர்ப்பாக்கிய நிலையில் எந்த மாறுதலும் இராது. இனி அன்பில்லை, ஆறுதல் இல்லை, இரக்கம் இல்லை , ஓய்வு, உறக்கம், நிம்மதி எதுவுமேயில்லை! திரும்பும் பக்கமெல்லாம் பசாசுக்களும், கொடிய ஆத்துமங்களுந்தான்! 

என்றாவது ஒருநாள் இந்த வாதையெல்லாம் முடிந்து போகும் என்ற நம்பிக்கை மட்டும் இருந்திருந்தால், நரகவாதை சமாதானமாய் மாறிப் போகும். ஆனால் நரகத்தில் எஞ்சியிருப்பதெல்லாம் அவநம்பிக்கை மட்டுமே. 

கோடானுகோடி வருடங்கள் சென்ற பிறகு பசாசு பாவியின் காதருகில் வந்து: 'உன் வேதனை இப்போதுதான் தொடங்கு கிறது' என்று சொல்லி எக்களித்துச் சிரிக்கும்!

அமைதியாக அமர்ந்து, நரகம் என்பது நித்தியமானது என்ற சத்தியத்தை அடிக்கடி ஆழ்ந்து தியானித்து வா! உன்னைப் பாவத்திலிருந்து விலக்கி, புண்ணிய வாழ்வுக்குக் கொண்டு வந்து சேர்க்கவும், அதில் வலமோ, இடமோ சாயாமல் மோட்சத்தை நோக்கி நேராக நடக்கச் செய்யவும் அந்த தியானமே போதுமானதாயிருக்கும்!

நித்தியம் என்பது பயங்கரம்!

கருத்துகள்